ஒரு ரிலாக்ஸ் மூடில் விஜயைச் சந்தித்தோம். ‘வேலாயுதம்’ படத்தில் வரும் அதிரடி சூப்பர் ஹீரோ கெட்டப்பில் இருந்தவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார். இனி விஜயின் மினி பேட்டி...
‘வேலாயுதம்’ மூலமாக மீண்டும் பரபர ஆக்ஷன்ல இறங்கிட்டீங்க போல..
“விஜய் ஃபார்முலான்னு சொல்வாங்களே அதில் மறுபடியும் நான் நடிக்கிற ஒரு சூப்பர் கமர்ஷியல் படம். ஹீரோ இருப்பார். வில்லன் இருக்கார். ஒண்ணுக்கு ரெண்டு ஹீரோயின்கள். ஆனால், இதுல வில்லனை ஹீரோ அடிச்சு துவம்சம் பண்ணணும்னு படம் பார்க்கிற ஆடியன்ஸ் ஃபீல் பண்ணுவாங்க. அதற்கான காரணம் புதுசு. ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார், ‘ஜெயம்’ ராஜான்னு நல்ல டீம். ராஜாவுக்கும் எனக்கும் நல்லா செட்டாகியிருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜா கூட சேர்ந்து படம் பண்ணணும்னு எல்லா ஹீரோக்களும் ஆசைப்படுவாங்க. சொல்லியடிக்கணுங்கிறது ராஜா மைன்டுல ஓடுகிற விஷயம். அவருடைய அப்பா எடிட்டர் மோகன் சாரும் பெரும் பலமாக பின்னணியில இருக்காங்க.’’
ஒரு மாஸ் ஹீரோவாக வரவேற்பு இருக்கும்போது உங்களுக்கு எதிரே இருக்கிற சவால்கள் என்னென்ன?
“ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தால் நமக்கு பொறுப்புகளும் அதிகம்.இதை நான் உணர்ந்துக்கவே ரொம்ப வருஷங்களாயிடுச்சு.. ஒரு படம் பண்ணும்போது என்னோட வேலையில மட்டும்தான் கவனம் செலுத்துவேன்.முதல்ல கதைகள் கேட்பேன். அதில் பிடிச்சதைத் தேர்ந்தெடுப்பேன்.கதையைக் கேட்க உட்காரும் போது எனக்குத் தேவையானதை முதலிலேயே பேசிடுவேன்.
பிறகு அதுல தலையிடுவதே இல்லை. ஷூட்டிங் போனபிறகு அந்த இயக்குநருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன். அவர் விரும்பிக் கேட்பதைக் கொடுக்கிறதுலதான் என் கவனம் முழுசும் இருக்கும். இது பலமுறை வொர்க் அவுட்டாகியிருக்கு. சில சமயம் என்னோட கணிப்பு தவறியும் போயிருக்கிறது. ’கில்லி’, ‘திருப்பாச்சி’க்குப் பிறகு நீங்க சொல்ற மாதிரியான பொறுப்புகள் என் தலை மேல இன்னும் அதிகமாகியிருக்கு. அதையும் நான்தான் கவனிக்கணுங்கிறதைப் புரிந்துகொண்டேன்.’’
கோவையில் நடந்த இரண்டு குழந்தைகளோட கொடூரமான கொலையைப்பத்தி பரபரப்பான ஸ்டேட்மெண்டுகளை வெளியிட்டீங்களே. திடீர் ஸ்டேட்மெண்டுக்கு என்ன காரணம்?
“அந்த சமயத்துல நான் கோவையில்தான் இருந்தேன். ச்ச்ச்சே...எப்படிதான் இவங்களுக்கு இப்படியெல்லாம் மனசு வருதுன்னே தெரியல. அப்படி என்னதான் கோபம், வெறி... அதுவும் குழந்தைகள் மேல.. அதைப் பொறுக்க முடியாமதான் மனசுல பட்டதை போட்டு உடைச்சிட்டேன். என்ன தப்பு நடந்தாலும் உள்ளே போய் வெளியே வந்துடலாம்னு ஒரு தைரியம் யாருக்கும் வரக்கூடாது. இது மாறணும். தப்பு பண்ணினா தண்டனை நிச்சயம்.தப்பிக்கவே முடியாதுங்கிற நிலை வரணும். ஒரு பயம் இருக்கணும். அப்பதான் ஒரு ஒழுங்கு வரும்.அதனால இந்தக் காலகட்டத்-துக்கேத்த மாதிரி சில தேவையான விஷயங்களை சட் டங்கள்ல சேர்த்துக்கலாம். தப்பு செய்றவங்களை சும்மா விடக்கூடாது.’’
கமர்ஷியல் படங்கள்ல ஆக்ஷன், காமெடி, பாடல்கள்ல கவனம் செலுத்துற அளவுக்கு நீங்க உங்க படங்களின் மேக்கிங், தொழில்நுட்ப விஷயங்கள்ல அதிகம் கவனம் செலுத்துறது இல்லையே அது ஏன்?
“நீங்க சொல்ற அந்த அழகியல் சமாச்சாரம், ரசனையான மேக்கிங் சினிமாவுக்குத் தேவைதான்.ஆனால் அதுமட்டுமே முக்கியமில்ல. அதைவிட முக்கியம் படத்தோட ஸ்கிரிப்ட்..ஒரு நல்ல கதை இல்லைன்னா மனசைத் தொடுற ரசனை இருந்தும் பிரயோஜனம் இல்ல. நீங்க சொல்ற மாதிரி என்னோட படங்கள்ல கதையோடு சேர்ந்து வர்ற மேக்கிங் கொஞ்சம் கம்மிதான்.பொதுவாக ஒரு கதை ஜெயிக்கும்னு தோணுச்சின்னா துணிஞ்சு இறங்கிடுவேன். இனிமேல்தான் நீங்க சொல்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தணும். நிச்சயம் பண்ணுவேன்.’’
சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு-வருக்கும் ஒரு அடுத்த கட்டம் இருக்குதே. உங்களோட அடுத்தகட்டம் என்பது என்ன?
“‘உன்னோட படத்துல ஒரு நல்ல மெஸேஜ் வைச்சுக்கோ’ன்னு அப்பா அடிக்கடி சொல்வார்.ஆனால் எதுக்கு மெஸேஜ் சொல்லிட்டு.. யாரை-யாவது காயப்படு த்துற மாதிரி படம் பண்ணணுமானு நினைச்சிருக்கேன். கவலையை மறக்க தியேட்டருக்கு வர்ற மக்களுக்கு எண்டர்டெய்ன் மெண்ட்டா படம் பண்ணணும். படத்துக்குத் தேவையானதை மட்டும் கொடுத்தால் போதும்னு நினைச்சிருந்தேன்.ஆனால் இனி வருகிற காலத்துல எல்லோருக்கும் பிடிக்கிற பொழுதுபோக்கு சமாச்சாரங்களோடு, சிந்திக்க வைக்கிற நல்ல விஷயங்களையும்,நம்ம சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மெஸேஜும் சொல்ல ஆசையாக இருக்கு.’’.
No comments:
Post a Comment