Friday, November 5, 2010

இளைய தளபதி விஜயுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - தீபாவளி ஷ்பெஷல்!!

விஜய் இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக பேசக் கற்றுக்கொண்டிருகிறார். விஜயைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினிக்குப் பிறகு 80 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் கொண்ட ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.
ஈழபோர் உச்சத்தில் இருந்த போது தமிழகம் முழுவதும் தனது ரசிகர்களுடன் போரை நிறுத்தும்படி உண்ணாவிரதம் இருந்தார்.
விஜயின் தோல்விப்படங்கள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக விநியோகஸ்தர்கள் கொடி பிடித்தாலும் தனக்கு சரியான கணக்கை காட்டினால் நஷ்டத்தை ஈடுகட்டத் தயார் என்று சொன்னவர் விஜய்.
அப்பா எஸ்.ஏ.சியின் வழிகாட்டுதலுடன் அரசியலுக்கு அடித்தளம் இட்டு வரும் விஜயிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தாலும், எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி சர்ச்சையைக் கிளப்பவோ அல்லது சர்ச்சையில் மாட்டிக்கொள்ளவோ விரும்பவில்லை
விஜய்… தீபாவளி சிறப்பு சந்திப்பாக காவலன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்த விஜய்,அளித்த சிறப்பு நேர்காணல் இது…

  • வலைதளங்களை பார்ப்பதுண்டா? அவை இன்று முக்கிய மீடியாவாக வளர்ந்திருப்பது தெரியுமா?
கண்ணை முடிகிச்சுன்னா உலகம் இருண்டு போச்சுன்னு பூனை நினக்கும்ன்னு பெரியவங்க பழமொழி சொல்லுவாங்க. அந்த மாதிரி கண் மூடித்தனமா நான் தூங்கிட்டு இல்ல. என்னைப் பத்தி வெப் சைட்ல வர்ற எல்லா செய்திகளையும் என்னொட பிஆர்ஓ எனக்கு லிங் அனுப்புவார்.
வெப்சைட் போய் ரெகுலரா எதையும் பார்க்கிறதில்ல. போர் நடந்தப்போ அப்பப்போ சில சைட்டுகளை ஓப்பன் பண்ணி பார்ப்பேன். அப்படிப் பார்த்துட்டு பலநாள் சாப்பிடப் பிடிக்காம, தூக்கமும் வராம கஷ்டப்படிருக்கேன். இந்த விஷயத்தை இப்போதான் முதல் தடவையா சொல்றேன். இப்போல்லாம் அந்த சைட்டுகளைப் பார்க்கிறதில்ல. அப்பா சொல்லி சொல்லி இப்போ ரெகுலரா நீயூஸ்பேப்பர் படிக்கிறேன். ப்ரியா இருந்தா கட்டாயம் டிவி நியூஸ் பார்ப்பேன்.  
  • ஆனா இலங்கயில இலங்கை பத்தி இவ்வளவு பேசுற நீங்க அசினை இந்தப் படத்துல இருந்து தூக்கியிருக்கலாமே?
இந்தக் கேள்வி வேண்டாமே ..ப்ளீஸ்! ஏன் சொல்றேன்னா.. இதுக்கு என்ன பதில் சொன்னாலும் அது சப்பக்கட்டுற மாதிரி ஆயிடும். நானும் அசினும் இதுக்கு முன்னாடி சேர்ந்து நடிச்ச சிவகாசி, போக்கிரி இரண்டுக்குமே பெரிய வெற்றி கிடைச்சது. இந்த முறையும் அப்படியொரு ட்ரீட் கொடுக்கனும்ன்னுதான் அசினைக் கேட்டோம்.

இது ரெடிக்கு அப்புறம் அவர் செஞ்சது பத்தி நான் பேச விரும்பல. ஆனா தனிப்பட்ட முறையில என்னோட வருத்தத்தை அசினுக்கு சொன்னேன். என்ன சார் நீங்களும் இப்படிப் பேசுறீங்கன்னு சொன்னாங்க. அசின்ஒத்துகிட்ட படம். நல்ல திறமைசாலியான ஆர்டிஸ்ட். ஆனா பாட் பட்டுண்னு யோசிக்காம சில விஷயங்களை பண்ணிடுவாங்க. இலங்கை போனதும் அப்படி எமோஷனல் ஆகித்தான் பண்ணியிருக்கனும்.

அங்கே எவ்ளோ பேர் விதவை ஆகியிருக்காங்க. எவ்வோ பேர் காணாம போயிருக்காங்க… எவ்வளவு உயிரிழப்புன்னு சொன்னேன். இதெல்லாம் எதும் தெரியாது சார் சாரின்றாங்க. இதோ காவலன் சூட்டிங் போர இடத்துல எல்லாம் புரட்டஸ்ட் பன்றாங்க. அவங்களுக்கு உரைக்கட்டும்ன்னு நான் கண்டுகிறது இல்ல. அசினைப் பத்தி இதுக்கு மேல பேசினா அது அநாவசியம் ஆயிடும். நீங்க காவலைனைப் பத்தி கேளுங்க.
  • சீமான் இயக்கத்துல நடிக்கிறது மூலமா நீங்க உலகத்தமிழர்கள் உங்க மேல வெச்சிருக்க கோபத்தை சமாதனப்படுத்தப் போறீங்கண்ணு எழுத ஆரம்பிச்சுருக்காங்களே?
நீங்களே சொல்லீட்டிங்க எழுதறாங்கண்ணு இதுக்கு நான் பதில் சொல்லனுமா? சீமான் சார் எனக்கு ஒரு கதை சொன்னாங்க. ரொம்ப பிடிச்சிருந்தது. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். உலகத்தமிழ் மக்கள் என் மேல கோபமா இருக்காங்கண்ணு சொல்றத நான் ஏத்துகமாட்டேன். நான் தவறு செஞ்சாதானே அவங்க என் மேல கோபப்பட முடியும். நான் எந்த தப்பும் பண்ணல.

என்னோட மனச்சாட்சிக்கு மட்டும்தான் நான் கேர் பண்ணுவேன். விதண்டாவாதம் பேசறவங்க கூட பேசுறதே நமக்கு டைம் வேஷ்ட். இந்த மாதிரி கேட்டு நீங்களும் ஏண் டயத்தை லூஸ் பண்றீங்க?• 

3 இடியட்ஸ் ரீமேக் இருக்க இல்லையா? அதுல நீங்க இருக்கீங்களா இல்லையா?

விடமாட்டீங்களே…! அக்சுவலி ஷங்கர் டைரக்‌ஷன்ல முதல்வன் படத்துலயே நான் பண்ணியிருக்கனும். அப்போ முடியாம போச்சு. இந்தமுறை கிட்டதிட்ட உறுதியான மாதிரிதான். இதை முறைப்படி ஷங்கர் சாரும், கம்பெனியும் கட்டாயமா கூப்பிட்டு சொல்லுவாங்க. அதுக்கு முன்னாடி நான் அதிகமா பேசினா அது அதிக பிரசங்கித்தனம். நானும் உங்கள மாதிரிதான் இது சரியா வரும்ன்னு நம்பிகிட்டு இருக்கேன்.

கொஞ்சம் பொறுங்க!

•சித்திக்-விஜய் கூட்டணி மறுபடியும் எப்படி செட்டாச்சு?


லக்குன்னுதான் சொல்லனும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சித்திக் சார் இந்தக்கதையைச் சொன்னார். ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. இதுல ஹீரோவோட இன்னோசெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதுவுமில்லாம ஆக்‌ஷன் காமெடியில சித்திக் சாரை அடிச்சுக்க முடியாது. ஃப்ரெண்ட்ஸ் படத்துல வந்த காமெடி இன்னைக்குமெப்படி எவர்கீரினா இருக்கோ அதேமாதிரி ஆக்‌ஷன் காமடி இதுலயும் அருமையா வந்திருக்கு.

• இதுல உங்க கேரக்டருக்கு வழக்கமான பில்ட்- அப்போ, பஞ்ச் டலாக்கோ கிடையாதாமே?


ஒட்டு மொத்தமா அப்படி சொல்லிட முடியாது. ஆனா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபடம். இதுல நான் பூமிநாதனா தெரிஞ்சா அதுதான் இந்தப் படத்துக்கு பெரிய பூஸ்ட்.இதுல என்னை விஜயா பார்த்துடக் கூடாதுண்ணு சித்திக் சார் ரொம்ப எபோர்ட் எடுத்துருக்கார். அதேநேரம் என்னோட ரசிகளையும் ஏமாத்தக் கூடாதுன்னு அதுக்கும் டைரக்டர் சின்சியரா ஒர்க் பண்ணியிருக்கார். பெரிய ஹிட்டா இர்ருக்குன்னு நம்புறேன். டிசம்பர் 26 பார்த்துட்டு சொல்லுங்க.

• இத்தனை பெரிய ஹீரோவா இருந்துகிட்டு குடும்பத்துக்கு உங்களால நேரம் செலவழிக்க முடியுதா?

உங்கள் குழந்தைகளை கொஞ்ச உங்களுக்கு நேரமிருக்க.? என்னோட திவ்யாவக் கொஞ்சுரதுக்காகவே 6 மணிக்கு மேல நான் நடிக்கிரதில்ல. அவங்கள மேய்க்கிறது, படிக்க வைக்கிறது எல்லாமே என்னோட ஒய்ப் டிபார்ட்மெண்ட். அதை அவங்க மட்டும்தான் ஃபர்பெக்டா செய்ய முடியும். நான் பாசத்துல வீக். டாட்டர் யூகேஜி படிக்கிறா. கம்ப்யூட்டர் கேம்ஸ்ல இறங்கிட்டா அவளுக்கு சாப்பாடே வேண்டாம். சங்ஜய்க்கு கிரிகெட்தான் சாப்பாடு. இப்போ அவருக்கு டான்ஸ்ல ஆர்வம் குறைஞ்சு போச்சு. அவங்கள் விருப்பங்கள்ல நான் தலயிடுறதில்ல.•

அடுத்த படம்? வேலாயுதம். ஜெயம்ராஜாவுக்கும் எனக்கும் ஒத்துப்போன விஷயம் அவர் காட்டுற ஈடுபாடு… ஒரு நேரத்துல ஒரு வேலைதான் செய்யனுன்னு நான் நினைக்கிற மாதிரியே அவரும் நினைகிறார். கதையில சின்ன விக் ஏரியா இருந்தாலும் அதை ஸ்ட்ராங் ஆக்குற வரைக்கும் விடமாட்டார். வேலாயுதமும் பெரிய வெற்றிய இருக்கும்… !

3 comments:

  1. VijaY Anna RocKz..................

    ReplyDelete
  2. anna waiting for ur success films

    ReplyDelete
  3. vijay anna rockzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzZZZZZZZZZZZZZZZ!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete