முன்பு கோலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் ஏ.எம். ரத்தினம். இளைய தளபதி விஜயை வைத்து கில்லி, சிவகாசி என்று மெகா வெற்றிப் படங்களைத் தந்தவர். அது மட்டுமல்ல. ஒரே நேரத்தில் ஆறு மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர்.
யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, மாதந்தோ...றும் பல கோடி ரூபாயை அவர் வட்டியாக மட்டுமே கட்டிவருவதாவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் தெரிவித்தார் சக தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன்.
இப்போது அவருக்குக் கடனில் இருந்து மீள ஒரு வழி பிரந்திருக்கிறது என்பது அவரது அலுவலகத்தில் எல்லோர் முகத்திலும் மகிழ்சி நிரம்பி வழிவதிலிருந்தே தெரிகிறது. அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் விஜய். ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
இந்தப் படத்தை 2011 ஜூன் மாதம் தொடங்கலாம், தயாராக இருங்கள் என்று சொல்லியிருகிறாராம் விஜய். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கிய அதே வெற்றி இயக்குனர்.
விக்ரம் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக, “எனக்கு இன்னும் வேகமான திரைக்கதை வேண்டும். உங்களால் முடியுமா?” என்று விஜய் கேட்கப்போய் 60 நாட்களில் விஜய் கேட்டது போலவே, அடுத்தது என்ன… அடுத்தது என்ன என்று சொல்லும் விதமாகத் திரைக்கதையைத் தனியொரு ஆளாகவே உருவாக்கி முடித்தாராம் விக்ரம். அதுவும் ரத்தினம் அலுவலகத்திலேயே என்கிறார்கள் அவரது உதவியாளர்கள் தரப்பில்.
விஜய் மீண்டும் கதையைக் கேட்டதும், ரத்னம் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுக்கொள்ள விஜய் அனுமதி கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் ரத்தினம் அலுவலகத்தில்.
கலக்குங்க தளபதி.........
No comments:
Post a Comment