தமிழ் சினிமாவில் சில காலம் ஆஸ்கர் கனவு கண்ட கலைஞானி கமல், ஹேராம் படத்துக்கு கட்டாயம் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அவரது கனவை வடமாநிலப் படங்களின் அரசியல் அடித்து நொறுக்கிவிடும். இதனால் ச்சீ. சிசீ இந்தப்ழம் புளிக்கும் என்று நொந்து போன கமல், “ ஆஸ்கர் என்பது அமெரிக்கப் படங்களுக்கு தரப்படும் விருது. அதனால் அதை இந்தியப் படங்களுக்கு எதிர்பார்ப்பது தவறு” என்றார்.
இப்போது மசாலா வாசனை மணக்கும் கோலிவுட்டில் யாரெல்லம் ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுவது என்றே தெரியவில்லை. கதாநாயனின் இடுப்பில் அர்னா கயிறு இருக்கிறதோ இல்லையோ ஹரி இயக்கும் படத்தில் கதாநாயகன் கையில் கண்டிப்பாக கத்தி இருக்கும். அப்படிப்பட்ட இயக்குனர் ஹாரி சூர்யாவை வைத்து இயக்கிய மசாலா படமான ‘சிங்கம்’ படத்தை ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கும்படி விண்ணப்பித்து இந்திய ஆஸ்கர் குழுவுக்கு சிங்கம் படத்தை அணுப்பி வைத்த துணிச்சல் அவரைத் தவிர வேறு யாருக்கு வரும்!
அருவா இயக்குனரின் இந்த ஆஸ்கர் ஆசை விவகாரம் கோடம்பாகத்தில் வெளியானதும் சக இயக்குனர்கள் “கொல்லன் பட்டறையில இந்த ஹரி ஈஈஈக்கு என்னப்பா வேலை” என்று கெக்கே பிக்கே என்று சிரிக்கிறார்களாம்.
2010-ல் வெளிவந்த படங்களை ஆஸ்கார் விருதுகளுக்காக அனுப்பும் தேர்வு தற்பொழுது டெல்லியில் நடந்து முடிந்தது. இந்த தேர்வில் பலத்த போட்டி இருந்தும், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதுக்கு, இந்தியா சார்பில் ‘பீப்லி லிவ்’ அதிகாரப் பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகளை மையப்படுத்திய கதைக் கருவினை கொண்ட ‘பீப்லி லிவ்’, இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டினை பிரதிபலிக்கும் படமாக ரசிகர்கள், பார்வையாளர்களால் பெரிதும் பராட்டப்பட்டு வரும் இந்தப்படத்தை, தேர்வு குழு தலைவர் கே.எஸ்.சேதுமாதவன் தலமையிலான குழு இப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தது.
27 திரைப்படங்களின் போட்டியை தாண்டி, ‘பீப்லி லிவ்’ தேர்வாகியுள்ளது. அந்த 27 படங்களில் ஐந்து படங்கள் தமிழ்ப் படங்கள் என்பதுதான் ஆச்சர்யம்! பாலிவுட்டின் ‘மை நேம் இஸ் கான்’, ‘ராஜ்நிட்டி’. ‘3 இடியட்ஸ்’, கேரளாவின் ‘பழசிராஜா’ போன்றவை போட்டியிலிருந்த மற்ற குறிப்பிடத் தக்க படங்கள்.
தமிழ்ப் படங்களில் அங்காடித்தெரு, விண்ணைத் தண்டி வருவாயா, ராவணன், மதராசாப்பட்டினம், சிங்கம், ஆகிய படங்கள் ஆஸ்கார் தேர்வுக்காக போட்டியிட்டன. அங்காடித்தெரு, ‘பீப்லி லிவ்’படத்துக்கு மிகப்பெரிய சாவாலாக இருந்தும் ‘பீப்லி லிவ்’ இறுதியில் வென்றது. அனுஷா என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தின் தயாரிப்பாளர் அமீர்கான் ஆஸ்கரை வாங்கும்வரை உறங்கபோவதில்லை என்று சொல்லுகின்றார்.

No comments:
Post a Comment