எந்திரன் படத்தை முடித்து ரசிகர்களின் ஆரவார வரவேற்பையும் முழுமையாக அனுபவித்துவிட்டார் ஷங்கர். போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்ற பயத்தை அப்பளமாக்கியிருக்கிறது பாக்ஸ் ஆஃபிஸில் ரிசல்ட்.
இயக்குனர் ஷங்கர் இதுவரை பிரம்மாண்ட படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இதனால் ஒவ்வொரு படத்தை முடிப்பதற்கும் இவருக்கு வருடக்கணக்கில் ஆகிவிடுகிறது. தனது 17 வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் ஷங்கர் 10 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இருப்பினும் அவற்றுள் ஒன்பது படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளன என்பதே கவனிக்கத்தக்கது. ( பாய்ஸ் திரைப்படம் சர்சைக்குரிய படமாக பார்க்கப்பட்டாலும், அதுவும் வெற்றியே அடைந்தது ).
90% வெற்றிக் களிப்புடனும், தனது கனவுப்படமான “எந்திரனை” வெற்றிப்படமாக்கிய மகிழ்ச்சியுடனும் உள்ள ஷங்கர், தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். “3 இடியட்ஸ்” திரைப்படம் ஷங்கரின் அடுத்தப் படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இப்படத்தை இயக்க விரும்பவில்லை என்றும், படம் கைவிடப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எந்திரன் தந்த திருப்தியுடன் “3 இடியட்ஸ்” -ன் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பை தொடங்குகிறார் ஷங்கர். விஜயுடன் நடிக்கும் மற்ற இரண்டு நடிகர்களையும் தேர்வு செய்துவிட்டார் ஷங்கர். ஆமாங்க, ஜீவா மற்றும் சித்தார்த்தை உறுதி செய்துவிட்டார் ஷங்கர். தெலுங்கில் விஜய்க்குப் பதிலாக மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார்.
ஒரு படம் முடிந்ததும் குடும்பத்துடன் வெளிநாடு சென்று ரிலாக்ஸ் செய்வது ஷங்கரின் வழக்கம். இந்தமுறையும் வெளிநாடு செல்கிறார். ஓய்வு முடிந்து திரும்பியதும் 3 இடியட்ஸ் ரீமேக் தொடங்கயிருக்கிறது
No comments:
Post a Comment