தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு உதவ, 'த்ரி இடியட்ஸ்'ஸுக்கு முன்னதாகவே இணைகிறார்கள் இயக்குனர் ஷங்கரும், நடிகர் விஜய்யும்.
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த கடைசி 3 படங்களுமே அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனவே, மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே தீர வேண்டும் என மலையாளத்தில் வெளிவந்த 'பாடிகார்ட்', தெலுங்கின் 'ஆசாத்' மற்றும் இந்தி '3 இடியட்ஸ்' என ரீமேக் ரூட்டுக்கு மீண்டும் திரும்பினார்.
'3 இடியட்ஸ்' படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி பிலிம் சர்க்யூட், இயக்குனர் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், இப்போது அப்படத்தின் வேலைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் காரணத்தால் அவரது மகன் விஜய்யை அமீர்கான் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்து, கால்ஷீட்டையும் வாங்கினார் இயக்குனர் ஷங்கர்.
3 இடியட்ஸை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்க இருந்த நிலையில், விஜய்யை தெலுங்கிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார், எஸ்.ஏ.சந்திரசேகரன்.
இதுகுறித்து ஷங்கரிடம் தனது கோரிக்கையையும் வைத்திருக்கிறார். இப்படி ஒரு விஷயத்தையே எதிர்பார்க்காத ஷங்கர், வேறு வழியின்றி '3 இடியட்ஸ்' படத்தை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது.
இதுகுறித்து ஷங்கரிடம் தனது கோரிக்கையையும் வைத்திருக்கிறார். இப்படி ஒரு விஷயத்தையே எதிர்பார்க்காத ஷங்கர், வேறு வழியின்றி '3 இடியட்ஸ்' படத்தை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது.
தமிழ்ப் படங்களின் தயாரிப்பு செலவை விட, வட்டி அதிகமாக கட்டியவர் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டவர், ஏ.எம்.ரத்னம். ஷங்கரின் இந்தியன், பாய்ஸ் மற்றும் முதல்வன் இந்தி ரீமேக்கான நாயக் ஆகிய படங்களை தயாரித்தவர். விஜய்யின் கில்லி, சிவகாசி ஆகிய படங்களையும் தயாரித்தவர். தற்போது பெரும் கடன் சுமையில் இருப்பதால், அவருக்கு உதவ ஷங்கர் முன்வந்தார்.
ஷங்கரிடம் விஜய்யின் கால்ஷீட் இருப்பதால், இருவரும் எ.ஏம்.ரத்னம் தயாரிப்பில் இணைவது என இறுதி செய்யப்பட்டது.
முதலில் ஒரு மாஸ் பாட்டு, நாலு அதிரடி ஃபைட், க்ளைமாக்ஸுக்கு முன்னால் ஒரு குத்துப்பாட்டு... இப்படி விஜய் படங்களுக்குரிய ஃபார்முலா எதுவும் இல்லாமல், அவரை இயக்க முடிவு செய்திருக்கிறார், ஷங்கர்.
தற்போதையச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, ஷங்கரின் கண்டிஷன்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்திருக்கிறார் விஜய்.
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஷங்கர், சென்னைத் திரும்பியவுடன் இப்படத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கிறார்.
ஏ.எம்.ரத்னம் கடனில் இருப்பதால் உதவும் ஷங்கர், தன்னை இயக்குனராக்கி இப்போது கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு..?
No comments:
Post a Comment