
வந்திய தேவனாக நடிக்கப் போகிறார் விஜய். அவரது அண்ணன் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் மகேஷ்பாபு. இன்னொரு முக்கிய வேடத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது. இப்போது அதில் மாற்றம் வரும்போல தெரிகிறது. வேறொன்றுமில்லை, விக்ரம் வேடத்தில் நானே நடிக்கிறேன் என்று தானாக முன் வந்து கேட்டிருக்கிறாராம் சூர்யா.
விக்ரமை வைத்து தான் இயக்கிய ராவணன் எல்லா மொழிகளிலும் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருப்பதால் மீண்டும் அவருடன் இணைவது அவ்வளவு சரியாக இருக்காது என்று மணிரத்னம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதற்கு காரணமே சூர்யாதான் என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரிய மார்க்கெட் வைத்திருக்கும் சூர்யா இப்படத்தில் நடித்தால் விரல் நுனியில் வியாபாரம் நடக்குமே என்று யோசிக்கிறாராம் மணிரத்னம்.
ஆக, பொன்னியின் செல்வனின் முதல் பலி விக்ரமாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கிறார்கள் இந்த பட விஷயத்தை பின் தொடர்ந்து மோப்பம் பிடிக்கிற கோடம்பாக்கத்து ஆசாமிகள்.
No comments:
Post a Comment