Tuesday, July 19, 2011

விஜயின் மார்க்கெட் சரிந்துவிட்டதா??

என்னங்க வழமைபோல் இந்த ரசிகனுக்கு வேறவேலை இல்லை என்று சலித்துக்கொள்வது தெரிகிறது.போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என எமது கடமையை நாம் செய்துதானே ஆகவேண்டும். அண்மைகாலமாக விஜயின் மார்க்கெட் கிழ் இறங்கிவிட்டது என கதை அடிபடுகிறது.அதை பற்றித்தான் இங்கே அலசி ஆராயப்போறோம்.

இளையதளபதி, பூவே உனக்காக என்னும் படத்தில் தொடங்கி போக்கிரிவரை பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தவர்.பின்னர் தொடர் தோல்விகள். (முழுமையாக தோல்வி என கூறமுடியாது).
அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரகாசிக்கவில்லை.சூரியன் இல்லாத போது நட்சத்திரங்களுக்கு கொண்டாட்டம் என்பது போல விஜயின் பிரகாசிப்பு இல்லாத இந்த மூன்று ஆண்டுகளில் விஜய்க்கு கிழ் இருந்தவர்கள் மேலே வந்துவிட்டார்கள்.அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் சூர்யா.
ஆரம்பத்தில் விஜய்க்கு போட்டியாக இருந்தவர் அஜித்.அவரும் விஜயும் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர்.எனினும் விஜய் ஒரு படி மேல் ஏறி வசூலில் பாக்ஸ்ஆபிஸை நிரப்பினார்.தற்போது விஜய்க்கு போட்டியாக அஜித்துடன் சூர்யாவும் இணைந்து கொண்டார.ஆரம்பத்தில் மொக்கை படங்களை தந்த சூர்யா பின்னர் கஜினி,காக்க காக்க என நல்ல படங்களை தந்தார்.தற்போது மூன்று ஆண்டுகளாக வெற்றியை தந்த இவர் சமீபமாக ரத்த சரித்திரம் என்னும் குப்பையை தந்தார்.
இவை எல்லாம் இருக்கட்டும் நாம் இனி விசயத்திக்கு வருவோம்.

விஜய்க்கு மார்க்கெட் போய்விட்டது என கூறுவோர் முன்வைக்கும் காரணங்கள் என்ன :-

விஜயின் இறுதி ஆறு படங்களும் தோல்வியடைந்துள்ளது இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.இது மட்டுமே அவர்கள் முன்வைக்கும் காரணம்.
விஜயின் இறுதியாக வந்த ஆறு படங்களும் தோல்வி என்பவர்களுக்கு சரியான கணக்கு தெரியவில்லை போல் தோன்றுகிறது.விஜய் இறுதியாக நடித்த ஆறு படங்களாவன சுறா , வேட்டைகாரன் ,வில்லு , குருவி, அழகியதமிழ்மகன் , போக்கிரி என்பனவாகும்.போக்கிரி திரைப்படம் மெகா கிட் படம் என எல்லோரும் அறிந்த விடயம் ஆகும்.225 நாள் ஓடி வசூலில் சாதனை படைத்தது.

அழகியதமிழ்மகன் தோல்வியை தழுவினாலும் அதன் பின் வந்த குருவி 150 நாள் சென்னையில் ஓடி வெற்றி விழா கொண்டாடியது . அத் திரைப்படம் கில்லி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது. கில்லியின் வசூலினை இப்படம் தாண்டாத காரணத்தால் 150 நாள் ஓடியும் இப்படத்தை சிலர் தோல்வி படம் என்றே கூறுகின்றனர்.போக்கிரி மெகாகிட் படமான குழுவினரின் கூட்டணியில் உருவானது வில்லு .இத்திரைப்படம் போக்கிரியினை போல் வசூலில் சாதனை படைக்கவில்லை.அதன் பின் வந்த வேட்டைக்காரன் திரைப்படம் வசூலில் கிட்டானது.விஜயின் இறுதி 6 படங்கள் தோல்வி என்று சொல்பவர்களை என்ன என்று சொல்வது

விஜய்க்கு மார்க்கெட் சரியவில்லை என நிருபிக்கும் ஆதாரங்கள்:-

சமீபத்தில் நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள்.தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்

அடுத்து விஜயின் கால்ஷீட் கிடைத்து விட்டால் அவருக்கு லாட்டரி சீட் அடித்த மாதிரிதான் என்கிறார்கள் ஃபாக்ஸ் ஆபீஸ் இடைநிலைத் தரகர்கள். காரணம் விஜயின் படம் தோல்வி அடைந்தாலுமே கூட செகண்ட் ரிலீஸ் எனப்படும் இரண்டாம் கட்ட வெளியீட்டில் விஜயின் பழைய படங்கள் இப்போது இரண்டு வாரம் ஓடி பணம் சம்பாதித்து விடுவதுதான் என்கிறார்கள். இரண்டாம் கட்ட வெளியீட்டில் இன்று எம்.ஜியார், ரஜினி படங்களை வெள்ளிகிழமை போட்டால் அடுத்து வரும் வியாழன்வரை ஒருவாரம் குறையாமல் வசூல் எடுக்கலாம்.இப்பொது மூன்றாவதாக விஜய் படங்களுக்கு மட்டும்தான் இந்த மவுசாம். தவிர திருட்டு வீசிடி சந்தையில் ரஜினியை விடவும் விஜய்க்குத்தான் பிஸ்னஸ் என்கிறார்கள் பர்மா பஜார் பைரேட்டர்கள். படுதோல்வி அடைந்த சுறா, தமிழ்நாடு, பாண்டிச்செரி, ஏனாம், மங்களூர், மும்பை ஆகிய பைரசி சந்தையில் 4 கோடி கொட்டி கொடுத்திருக்கிறது என்று ரேண்டம் சர்வே எடுத்திருகிறார்கள் சென்னை லயோலா கல்லூரியின் புள்ளியியல் துறை மாணவர்கள். அந்த அளவுக்கு விஜய் மார்கெட் வலிமையாக உள்ளது.

அண்மையில் பிரபல ஜோஸ்ஆலுக்காஸ் நிறுவனம் தமது வர்த்தக தூதுவர் ஆக விஜயினை தெரிவு செய்துள்ளனர்.இவ்வாறு தெரிவு செய்தமைக்கு காரணம் என தெரியுமா.தமிழ் நாட்டில் சந்து பொந்தெல்லாம் ரீச்சாகும் ,மக்களை விரைவில் கவரும் நடிகர் நம்ம தளபதிதனாம்.

இந்தவருடம் சிறந்த அபிமான நடிகர் விருதை இசையருவி இளையதளபதி விஜய்க்கு வழங்கியது.அத்துடன் விஜய் டிவியின் வாக்கெடுப்பில் சிறந்த அபிமான நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்

தொடர்ச்சியாக பல படங்களை பாக்கெட்டில் வைத்திருக்கும் நடிகர் நம்ம விஜய்தான்.காவலன்(Mega hit),வேலாயுதம்,Nanban,Gowtham Menon, A.r.Murugadoss,Mani Rathnam,
விக்ரம்.கே.குமாரின் படம்,அமீரின் கண்ணபிரான்,பகலவன் என அடுக்கி கொண்டே போகிறார் விஜய்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு ஓபனிங் மாஸ் உள்ள ஒரே நடிகர் நம்ம விஜய் என கூறுதல் மிகையாகாது.
இளையதளபதி விஜய்க்காக பல பேஸ் புக் பக்கங்கள் உள்ளன,எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு பல வலைத்தளங்களும்,ப்ளாக்குகளும் உள்ளன.உண்மையில் நீங்கள் தோல்வி என கருதும் சுறாவுக்கு பின்னர்தான் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பாருங்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் என்னும் மாபெரும் சக்தியை உடைய நம்ம தளபதியின் மார்க்கெட் சரிந்துவிட்டது என கூறலாமா??

7 comments:

  1. english transalation plz!!!!!!!!!>>>>>>>>>>>>........

    ReplyDelete
  2. nanba ungkalukku oru salam

    ReplyDelete
  3. hey ithan engal thalapathi....................
    vijay is always rockkkkkkkkk

    ReplyDelete
  4. sonna PURIYATHU sollukkulla adangathu naamellam thalapathymela vacha paasam

    ReplyDelete