இந்த கோபத்தையெல்லாம் தன் படங்களில் வசனங்களாக கொட்டிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறாராம். சித்திக் இயக்கத்தில் வெளிவரப்போகும் காவலன் படத்தில் அதற்கு முழு அளவு சாத்தியம் இல்லை. ஆனால் பின்னாலயே வருகிறதே, வேலாயுதம்! அதில் வைத்துக் கொள்ளலாம் தனது சூலாயுதத்தை என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். இப்போது அதற்கும் பிரச்சனை.ஆட்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் தனக்கென்று இருக்கிற தனிப்பட்ட குணத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தான் தயாரிக்கும் படத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாராம். “பஞ்ச் டயலாக் இருக்கட்டும். அதுக்காக அரசியல் பஞ்ச்களுக்கு நான் அனுமதி தர இயலாது” என்று கூறிவிட்டாராம்.
வயிறு பசிக்கிற நேரத்துல வாயை ஒட்டுன மாதிரி ஆகிவிட்டது விஜய்யின் நிலைமை!
No comments:
Post a Comment