Tuesday, January 11, 2011

ஆடுகளத்தை வாங்க மறுத்த ஐங்கரன் பிலிம்ஸ்-தைரியமாக வெளியிட்டது காவலனை


தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமைகளை வாங்கி உலகம் முழுவதும் படங்களை வெளியிடுவதில் முன்னணியில் இருப்பவர் ஐங்கரன்பிலிம்ஸ் கருணாமூர்த்தி. இவர் வருகிற பொங்கலன்று வெளியாகவிருக்கும் படங்களை வாங்குவதில் மிகுந்த சுணக்கம் காட்டியிருக்கிறார்.
அதற்குக் காரணம், மேற்கத்திய நாடுகள் அனைத்துமே கடும் பனிப்பொழிவின் காரணமாக இயல்பு வாழ்க்கையை முற்றிலும் தொலைத்துவிட்டு நிற்பதுதானாம். அங்கு நிலவும் இயற்கைச் சிக்கலால் தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பொங்கலன்று வெளியாகவிருக்கும் காவலன், ஆடுகளம், சிறுத்தை, இளைஞன் ஆகிய நான்கு படங்களில் விஜய்யின் காவலன் படத்திற்கு மட்டும்தான் நல்ல வியாபாரம் நடந்திருக்கிறதாம். எந்திரன் படம் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் ஆடுகளம் படத்தை வாங்க ஐங்கரன் நிறுவனம் மறுத்துவிட்டதாம். மாறாக விஜய்யின் காவலன் படத்தின் அமெரிக்க உரிமையை வாங்கி வெளியிடுகிறது  ஐங்கரன் பிலிம்ஸ்.
வேறு யாராவது வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்களாம். ஆனால் யாரும் வாங்கத் தயாராக இல்லையாம். விஜய் படங்களுக்கு ஒரு வரவேற்பு எப்போதும் இருப்பதால் அவருடைய படம் மட்டும் பிஸினஸ் ஆகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கிரகங்களின் மாற்றம் மட்டுமில்லை பருவநிலைகளின் மாற்றங்களும் பாதிக்கத்தான் செய்கின்றன

No comments:

Post a Comment