Tuesday, January 18, 2011

மலையாளிகளை கவர்ந்த காவலன்

பல தடைகளை தாண்டி திரைக்கு வந்திருக்கிறது காவலன். தமிழகத்தில் பல திரையரங்குகளில் காவலன் பதினைத்தாம் தேதி வெளியாகவில்லையென்றாலும் கேரளாவில் படம் திட்டமிட்டபடி வெளியானது. 

மலையாளத்தில் திலீப் நடித்த சித்திக்கின் பாடிகாட் படத்தின் ரீமேக்தான் காவலன். பொதுவாக மலையாளப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் கேரளாவில் சுமாரான வரவேற்பையே பெறும். மாறாக காவலன் மலையாளிகளின் மனதை பொpதும் கவர்ந்துள்ளது. 

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் காவலன் வெளியாகிவுள்ளது. வெளியான அனைத்துத் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றன. கேரளா முழுவதுமே இதுதான் நிலைமை என்பதால் மலையாள நடிகர்களே சற்று அதிர்ந்து போய் உள்ளனர். 

முதல்கட்ட தகவலின்படி விஜய்யின் தோல்வி சரித்திரத்துக்கு காவலன் அணை போட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment