Sunday, November 28, 2010

புதியதோர் விஜயை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஷங்கர்--3 இடியட்ஸ் மூலமாக

‘காவலனை’ தொடர்ந்து M ராஜாவின் ‘வேலாயுதம்’ படத்தில் நடிக்க விஜய்
ஒப்புக்கொண்டுள்ள போதிலும், ஷங்கரின் ’3 இடியட்ஸ்’ தமிழ்ப் பதிப்பில்
நடிக்க ஆர்வமாகவுள்ளார். ஏக்கனவே முதல்வன் படத்தினை தவறவிட்ட தளபதி
இப்போது ஷங்கரின் படத்தை எக்காரணத்தை கொண்டும் தவறவிட விரும்பவில்லை.

டிசம்பர் 6ல் ’3 இடியட்ஸை’ துவங்கப்போவதாக ஷங்கர் அறிவித்து விட்டதால், விஜய் சுறுசுறுப்படைந்துள்ளார்.

ஏற்கனவே ‘காவலன்’ படத்தை வேகமாக முடித்த விஜய்,
தற்பொழுது ‘வேலாயுதம்’ படத்தை மிக வேகமாக முடித்து ’3 இடியட்ஸிற்கு’
செல்லும் ஆவலுடன் உள்ளார். இதனால் இப்படத்தின் நாயகிகளான ஜெனிலியாவும்,
ஹனிச்கா மோத்வானியும் விஜய்க்கு சரிசமமாக படத்தை வேகமாக முடித்து
கொடுக்கும் நிலையில் உள்ளனர்.



எந்தவொரு நடிகரையும் வித்தியாசமான் ஸ்டைலில் காட்டும் ஷங்கர், இப்படத்தில்
புதியதோர் விஜயை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. தங்க முட்டையிடும் வாத்தை, தவற விட விரும்பாத
விஜயும், காவலன், வேலாயுதம் என அனைத்தையும் விரைவில் மூட்டை கட்டி
வைத்துவிட்டு ஷங்கரோடு, ’3 இடியட்ஸில்’ பயணிக்க ஆர்வமாக தயாராகி வருகிறார்

No comments:

Post a Comment