Thursday, November 25, 2010

தமிழுக்கு 'நண்பன்' தெலுங்கிற்கு '3 ராஸ்கல்ஸ்'

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 'நண்பன்' என்றும் தெலுங்கு ரீமேக்கிற்கு '3 ராஸ்கல்ஸ்' என்றும் பெயரிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment