எந்திரன் என்ற மெகா வெற்றிப் படத்தைக் கொடுத்த ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த படம் “3 இடியட்ஸ் ரீமேக்”. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கவிருக்கிறார் என்பதும், இதில் தமிழ் பதிப்பில் விஜய்யுடன், ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் அறிந்ததே.

விஜய்-ஷங்கர் முதல்முறையாக கூட்டணிபோடும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரைத்துரையினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதியுடன் முதல்முறையாக சீனியர் நடிகர் புரட்சி தமிழன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment