
அசின் கதாநாயகியாக நடித்துள்ளார். “காவலன்” படம் தன்னுடைய படம் அல்ல… இயக்குனர் சித்திக்கின் படம் என கூறியுள்ளார் விஜய். “காவலன்” சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாமல் சித்திக்கின் “ப்ரெண்ட்ஸ்” படத்தைப் போல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கயிறு கட்டி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என்று ஏற்கனவே விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பதால், இப்படத்தில் விஜய் இயல்பாக நடித்திருப்பார் என நம்பலாம். தனது வழக்கமான பாணியை தவிர்த்து, இயக்குனரின் நடிகராக இப்படத்தில் நடித்துள்ளாராம் விஜய்.
ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் விஜய். அனைத்தையும் பார்க்கும் போது விஜய்க்கு, ஒரு பெரிய வெற்றி காத்திருப்பது போன்றே தோன்றுகிறது
No comments:
Post a Comment