
மங்காத்தாவில் சில கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறாங்கன்னு மட்டும் சொல்லி இருக்காங்க. ஆனா யாரெல்லாம் அப்படிங்கறதுதான் குழப்பமே. நாகர்ஜூன் பெரிய ரோல் பண்றதா சொன்னாங்க, ஆனா அவரு உள்ளேயா?? வெளியவான்னு தெரியல. ஜெய் இருக்கிறாராம். வெங்கட் பிரபுக்கு நண்பர் என்பதால் ஜெய் இருக்கலாம். அடுத்து ஜீவா இருக்காராம்… அதும் தெரியல எவ்ளோ தூரம் சாத்தியம், உண்மைனு
சிம்பு இருக்கார்னு செய்தி வந்தது. ஆனால் அதையும் வானம் பிரஸ் மீட்ல புஸ்ஸுன்னு ஆக்கிட்டார் சிம்பு. அவர் கிட்ட நீங்க மங்காத்தாவில் நடிக்கீறீங்களான்னு கேட்டதுக்கு, ஆமா… நானும் கேள்விப்பட்டேன். அப்படி ஒரு எண்ணம் இது வரைக்கும் இல்ல. யாரும் நடிக்க சொல்லி கேட்கவும் இல்லை என்று மாங்காத்தாவுக்கு ஒரு குத்து விட்டு போயிட்டார் சிம்பு.
அக்டோபர் 20 ல் படப்பிடிப்பு ஆரம்பம்னு அறிவிச்சுட்டாங்க… ஸூட்டிங்க் ஸ்பாட்க்கு வந்தாதான் தெரியும் மங்காத்தாவுல யாரெல்லாம் இருக்காங்கன்னு..
No comments:
Post a Comment