
இது குறித்து விஜய் :
என்னுடைய நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “காவலன்”. இந்த படத்தில் அசின் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கிரன், ரோஜா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “காவலன்” என்னுடைய படம் அல்ல… இயக்குனர் சித்திக்கின் படம் என கூறியுள்ளார் விஜய்.
சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாமல் “ப்ரெண்ட்ஸ்” படத்தைப் போல் “காவலன்”அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது வழக்கமான பாணியை தவிர்த்து “இயக்குனரின் நடிகராக” இப்படத்தில் சித்திக் சொன்னபடி நடித்துள்ளாராம். ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம் விஜய்.
இந்த படத்திற்கு, விஜய் இயல்பான நடிப்பை தந்திருப்பதாகவும், இந்தப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் “காவலன்” படயூனிட்டார் தெறிவிக்கின்றனர்
No comments:
Post a Comment