Thursday, October 7, 2010

விஜயின் காவலனுக்கு நாள் குறிச்சாச்சு!

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் காவலன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. டிசம்பர் 24 ம் தேதி காவலன் படம் வெளியாகும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று அடுத்தடுத்து விழாக்கள் வருவதால் இந்தத் தேதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ‘பாடிகார்ட்’ படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய சித்திக்தான் தமிழிலும் இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக விஜயுடன் 3 வது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அசின். காவலன் படத்தில் விஜயின் கேரக்டர், அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜயுடன் முதல் முறையாக ராஜ்கிரன் இணைந்திருக்கிறார். வடிவேலு, ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைப்பில் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. விஜய், சித்திக் கூட்டணியில் வெளிவந்த “ப்ரண்ட்ஸ்” படத்தைப்போல் “காவலன்” இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் வினியோக உரிமையை பெரிய விலைக்கு வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரத்திடமிருந்து “காவலன்” உரிமையை வாங்க, சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எது எப்படியோ… தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று ஒட்டுமொத்தமாக காவலனை கொண்டாட தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

No comments:

Post a Comment