Thursday, October 7, 2010

இளைய தளபதியுடன் ஷாலினி அஜீத்!!!!!!!!!!!!

அல்டிமேட் ஸ்டார் அஜீத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். இனிமேல் பக்கா தயாரிப்பாளராக பல படங்களை எடுக்கப் போகிறாராம். சினிமாவில் இப்போது புது இலக்கணம் நடைமுறையில் உள்ளது. யார் வேண்டுமானாலும் எந்தத் துறையில் வேண்டுமானாலும் நுழைந்து கலக்கலாம் என்பதே அது.





இதனால் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் பல்வேறு முகங்கள் வெளியாகி, தமது துறையைத்தவிர மற்றவற்றிலும் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் நடிகர்கள் இயக்குநர்களாகிறார்கள். இயக்குநர்கள் நடிகர்களாகிறார்கள். வில்லன்கள் ஹீரோக்களாகிறார்கள், ஹீரோக்கள் வில்லத்தனம் செய்கிறார்கள்.





இப்படி பற்பல பரிமாணங்களை கண்டு வருகிறது தமிழ் சினிமா. அந்த வகையில், இதுவரை நடிகராக மட்டுமே அறியப்பட்டு வந்த அஜீத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். தனது மனைவி ஷாலினியை தயாரிப்பாளராக வைத்து குட்வில் என்டர்டெய்ன்மென்ட் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். இதை முறைப்படி தயாரிப்பாளர் கவுன்சிலிலும் பதிவு செய்துள்ளார்.





தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களைப் பொறுத்தவரை முன்பு ரஜினி படம் தயாரித்தார். கமல்ஹாசன் இன்று வரை தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார். விஜயகாந்தும் சொந்தப் படம் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அஜீத் தற்போது இணைகிறார்.  ஷாலினிஅஜீத்தின் குட்வில் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது

No comments:

Post a Comment