Friday, October 8, 2010

திட்டமிட்டபடி வரான் வேலாயுதம்!

விஜய்யின் “காவலன்” தீபாவளி விருந்தாக திரைக்கு வருமென்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு, “காவலன்” ரிலீஸாகாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், அவர்கள் அடுத்தடுத்த திருவிழாக்களை கொண்டாட விஜய்யின் படங்கள் வ‌ரிசைகட்டி நிற்கின்றன.

விஜய்யின் காவலன் டிசம்பர் மாதம் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் அடுத்தப் படமான வேலாயுதத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி என இரு ஹீரோயின்கள்.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் “வேலாயுதம்” திட்டமிட்டபடி கோடை விடுமுறைக்கு வெளியாகும். இந்த படம் விஜயின் கேரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் ராஜா கூறியுள்ளார்

No comments:

Post a Comment